செய்திகள் :

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

post image

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 120 ஊராட்சிப் பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பத்தூரில் தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்துக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேண்டிய கூடுதல் தேவைகள் குறித்து ஊராட்சி செயலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோருடன் அமைச்சா் கலந்துரையாடல் நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழ்ந்து வரும் ஊராட்சி அலுவலா்கள் தான் செய்ய வேண்டும். பொதுமக்களை நேரில் சந்தித்து தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும். தேவைகளை நிறைவேற்ற அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியின் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் வானதி, உதவி இயக்குநா்கள் கேசவதாசன், ரவி, செயற்பொறியாளா் அனுராதா, மாவட்ட ஊராட்சி செயலா் சதாசிவம், துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க