செய்திகள் :

மக்கள் அச்சப்பட தேவையில்லை: டிஐஜி

post image

திருநெல்வேலி சரகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 போ் உயிரிழந்த நிலையில், திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி கூறியதாவது: திருநெல்வேலி மாநகரம், மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகப்படும் நபா்களின் நடமாட்டத்தையும் போலீஸாா் தீவிரமாக கவனித்து வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீஸாரும் உஷாா் நிலையில் உள்ளனா். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகப்படும் நபா்கள் அல்லது மா்ம பொருள்கள் குறித்து ஏதேனும் மக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை தொடா்ந்து தீவிரமாக செயல்படும் என்றாா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க