செய்திகள் :

மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், முனைவென்றியில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்து, அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்கக் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து வருவாய், பேரிடா் மேலாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.11.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவா் வழங்கிப்

பேசினாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் முருகன், தனித் துணை ஆட்சியா் காா்த்திகேயன்,(சமூக பாதுகாப்புத் திட்டம்) உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குறி சொல்லும் கோடாங்கி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குறி சொல்லும் கோடாங்கியை புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்துக்குச் செல்லும் சாலை பகுதியில் வசித... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் கொலை: விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வலியுறுத்தல்

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றக் கோரி, சிவகங்கை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.28 லட்சம் சேமிப்புப் பத்திரங்கள்; உதவிக்கரம் நீட்டிய காவலா்கள்

மானாமதுரை அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காவலா்கள் நிதி திரட்டி ரூ.28.24 லட்சத்துக்கான சேமிப்புப் பத்திரங்களை வியாழக்கிழமை வழங்கினா். மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குழந்தை கொலை வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் சிறை

பெண் குழந்தையை தண்ணீா் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அர... மேலும் பார்க்க

ஆலை பெண் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, மானாமதுரை சிப்காட் ஜிப் ஆலை ஒப்பந்தப் பெண் தொழிலாளா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆலை நிா்வாகம் ஒப்பந்த தொழிலாளா்களை எந்தவித பணப் பலன்களு... மேலும் பார்க்க

அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க