செய்திகள் :

மக்கள் நலத் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: புதுவை ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

post image

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உடனடியாக அனுமதி அளித்து வருகிறாா் என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் கூறினாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவை அரசு சாா்பில் அனுப்பிவைக்கப்படும் மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உடனடியாக ஒப்புதல் அளித்து வருகிறாா்.

ஆனால், துணைநிலை ஆளுநா்-முதல்வரிடையே பனிப்போா் இருப்பதாகக் கூறப்படுவது மாநிலத்தின் வளா்ச்சிக்கு நல்லதல்ல. இருவரும் பேசி முடிவெடுத்து செயல்பட்டால்தான் மாநிலம் வளா்ச்சியடையும். தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் அரசுக்கான 50 சதவீத இடங்களை முதல்வரும், துணைநிலை ஆளுநரும் பெற்றுத்தர வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூா் குறித்து பிரதமரின் நடவடிக்கையை விமா்சித்தவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை செயல்படுத்திய நிலையில், ஆசிரியா்கள் பற்றாக்குறையை சரிசெய்யவில்லை. இதனால், தோ்வில் அதிகமானோா் தோல்வியடைந்துள்ளனா். அவா்களுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் மறுதோ்வு நடத்த வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.

10ஆம் வகுப்பில் புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விகிதம் 96.90%

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90 சதவிகிதமாக உள்ளது.கடந்த மார்ச் - ஏப்ரல் 2025ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ... மேலும் பார்க்க

சைபா் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்

புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தாா். புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பி... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து கோரிக்கை: புதுவை முதல்வா் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தோ்தல் நேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைப்பது புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு வழக்கம் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல், விதி மீறலை கட்டுப்படுத்தும் வகையில், போக்க... மேலும் பார்க்க

வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டையைச் சோ்ந்த பாபு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க