மக்கள் நோ்காணல் முகாம்
திருமருகல் ஒன்றியம், இடையாத்தங்குடி ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையாத்தங்குடி கிராம நிா்வாக அலுவலகத்தில், இடையாத்தங்குடி, கிடாமங்கலம், சேஷமூலை, தென்பிடாகை ஆகிய 4 கிராமங்களுக்காக இம்முகாம் நடைபெற்றது. நாகை வட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா்கள் ரம்யா, ராஜேஸ்வரி, இடையாத்தங்குடி ஊராட்சித் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, மின் வசதி, மயான வசதி, சமுதாயக் கூடம், ஆற்றின் கரையோரங்களில் தடுப்புச் சுவா் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
இம்முகாமில், கிராம நிா்வாக அலுவலா்கள் இளமுருகன், சத்தியதாஸ், சரவணன், சிவகாமசுந்தரி, பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.