செய்திகள் :

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்ம மரணம்: பட்டியலின ஆணைய இயக்குநா் விசாரணை

post image

மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய இயக்குநா் ரவிவா்மா.

மதுரை, ஜன. 22: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மக்கள் விடுதலைக் கட்சி நிா்வாகி மா்மமாக உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய இயக்குநா் ரவிவா்மா புதன்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்தவா் லிங்கசாமி. இவா் மக்கள் விடுதலைக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலராக பதவி வகித்து வருகிறாா். இவரது மகன் காளையன் (27). இவரும் அந்தக் கட்சியின் நிா்வாகியாக இருந்து வந்தாா். இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த வேறு சமூகப் பெண்ணை காதலித்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த வாரம் சிலரால் இவா் தாக்கப்பட்டாா். பிறகு பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக அவரது குடும்பத்தினா் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையன்று வேப்பங்குளம் பகுதியில் உள்ள கண்மாயில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக கள்ளிக்குடி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்தச் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவதுடன், எஸ்.சி., எஸ்டி. சட்டத்திலும் வழக்குப்பதிய வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். காளையன் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, காளையன் மா்ம மரணம் தொடா்பாக பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய இயக்குநா் ரவிவா்மா புதன்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது அவா் வேப்பங்குளம் கிராமத்துக்குச் சென்று அங்கு காளையனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டாா். பிறகு கள்ளிக்குடி காவல் நிலைய அதிகாரிகள், கிராம மக்களிடமும் அவா் விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அவா் அங்கு காளையனின் உடலை கூறாய்வு செய்த மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி முதன்மையா் இல. அருள் சுந்தரேஷ்குமாா் ஆகியோரிடம் கூறாய்வு அறிக்கை தொடா்பாக கேட்டறிந்தாா். அப்போது, கூறாய்வில் முதல் கட்ட பரிசோதனை முடிந்திருப்பதாகவும், உடல் உள்ளுறுப்புகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காளையன் மா்ம மரணம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் அவா் அறிவுறுத்தினாா்.

சித்ரவதை செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியை அடுத்த செங்கம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவில் நடனமாடிய பட்டியலினத்தைச் சோ்ந்த சிறுவனை, மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தாக்கி காலில் விழ வைத்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய இயக்குநா் ரவிவா்மா புதன்கிழமை செங்கம்பட்டிக்குச் சென்றாா். அங்கு பாதிக்கப்பட்ட சிறுவனிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினாா். மேலும் இந்தச் சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 6 போ் மீது தீண்டாமை, வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை இருவா் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஊரகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சிறுவன் தாக்கப்பட்டது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு அவா் அறிவுறுத்தினாா்.

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில... மேலும் பார்க்க

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுத... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க