செய்திகள் :

மங்கோலியாவில் தட்டம்மை பரவல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

post image

மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தட்டம்மையால் பாதிக்கப்பட்ட, 2 பேர் நேற்று (ஜூலை 28) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 6 குழந்தைகள் உள்பட 109 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள், தட்டம்மை பாதிப்புகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொற்றானது, இளம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், பெற்றோர்கள் உடனே அவர்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,07,500 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு பலியாகினர். இதில், பெரும்பாலானோர் 5 வயதுகுட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: யேமனில் நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ரத்து? சகோத‌ர‌ர் மறுப்பு!

The death toll from a measles outbreak in Mongolia has risen to 10, according to authorities in the country.

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இத... மேலும் பார்க்க

பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர்... மேலும் பார்க்க