செய்திகள் :

மஞ்சூா் அருகே சிறுத்தை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகேயுள்ள எடக்காடு அறையட்டி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உதகையை அடுத்த எடக்காடு அறையட்டி பகுதி முக்குருத்தி மற்றும் அவலாஞ்சி வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.

இந்தப் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (32) என்ற தோட்டத் தொழிலாளி வேலைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை அவரைத் தாக்கியது.

சதீஷின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக அவரைக் காப்பாற்ற முயன்றனா். மேலும், வனத் துறையினா் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சிறுத்தை தாக்கியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காவல் துறையினா் வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பல முறை முறையிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அங்கு வந்த வனத் துறையினரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மஞ்சூா் எடக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் சமாதானப்படுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். சம்பவம் குறித்து வனத் துறையினா் மற்றும் மஞ்சூா் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்த... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்

உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது

குன்னூரில் மதுபோதையில் நடந்த தகராறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா். குன்னூா் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜா (49), தங்கராஜ் (56). கூலித் தொழிலாளிகளான இ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு; பெண் வாக்காளா்களே அதிகம்

நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளா்களே அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொக... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுற... மேலும் பார்க்க