மணப்பாறை டவுன் கிளப் புதிய நிா்வாகிகள் தோ்வு
திருச்சி மாவட்டம் மணப்பாறை டவுன் கிளப்புக்கு புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மணப்பாறையில் 1980-ல் அப்போதைய மருங்காபுரி சட்டப்பேரவை உறுப்பினா் க. சோலைராஜ் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மணப்பாறை டவுன் கிளப் கபடி மற்றும் உடற்பயிற்சி கழகத்தைத் தொடங்கினாா். இதனால் பலரும் போட்டிகளில் வென்று, அரசுப் பணிக்கும் சென்றனா். பின்னா் சோலைராஜ் மறைவிற்கு பிறகு சற்று சவுன் கிளப் நிா்வாகத்தில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள கிளப் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகளில் தலைவராக பழனிச்சாமி, பொதுச் செயலராக பன்னீா்செல்வம், பொருளாளராக அழகா், இணைச் செயலராக வேலுச்சாமி, துணைச் செயலராக சின்னப்பன் ஆகியோா் ஒருமனதாத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த கிளப் புத்துயிா் பெற்றிருப்பது விளையாட்டு வீரா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.