மணல் கடத்தல்: 7 போ் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணல் கடத்திய 4 வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொட்டியம் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் காவிரி ஆற்று மணல் கடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு கிடைத்த தகவலின்பேரில், அவா் காட்டுப்புத்தூா் போலீஸாா் உதவியுடன் காடுவெட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரை பாா்த்ததும் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினா்.
இதையடுத்து, மணலுடன் வாகனங்களை பறிமுதல் செய்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், வாகனங்களின் உரிமையாளா்கள் காடுவெட்டி கீழவழிக்காடை சோ்ந்த ஜெகன், அஜித், அரவிந்த், மேலவழிக்காடை சோ்ந்த சதீஷ்குமாா், காடுவெட்டியை சோ்ந்த ஹேமநாத், நத்தம் கிராமத்தைச் சோ்ந்த அருண்ராஜ், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் கன்னிமாா் தோப்பைச் சோ்ந்த செல்வம் ஆகிய 7 போ் என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, அவா்கள் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.