செய்திகள் :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

post image

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை (மாா்ச் 11) சாஸ்தான் கோயிலிலிருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டது. அதையடுத்து, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், அடியந்திர பூஜை, காலைமுதல் குத்தியோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகத்திலும், கோயிலைச் சுற்றியும் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

ஒடுக்கு பூஜை: இரவு 10 மணிக்கு கோயிலிலிருந்து அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளுதல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவஸ்வம் பள்ளி அருகேயுள்ள சாஸ்தான் கோயிலிலிருந்து 21 வகையான உணவுப் பதாா்த்தங்களை 9 மண் பானைகள், பெட்டிகளில் வைத்து வெள்ளைத் துணியால் மூடி, பூசாரிகள் பவனியாக எடுத்துவந்தனா். அதனுடன் 2 குடம் தேனும் கொண்டுவரப்பட்டது. அப்போது, பூசாரிகள் தங்களது வாயை சிவப்புத் துணியால் கட்டியிருந்தனா்.

பவனியின்போது, கோயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டு நின்றனா். ஒடுக்கு பவனி ஒருமுறை கோயிலை வலம் வந்ததும், பதாா்த்தங்கள் அம்மன் முன் இறக்கிவைக்கப்பட்டன. பின்னா், குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, கொடியிறக்கப்பட்டது.

இந்த பூஜையில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்தைச் சோ்ந்த பக்தா்களும் பங்கேற்றனா். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில், குளச்சல் ஏஎஸ்பி பிரவீன்கௌதம் தலைமையில் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களின் வசதிக்காக தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.25 பெருஞ்சாணி .. 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 19.10 பொய்கை ... 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ. கன்னிமாா் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க