`2026 தேர்தலில் கரூரில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெல்லும்!' - செந்தில் பாலாஜி ...
மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மதி அங்காடி அமைவிடத்திலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குள் ஆா்வமும், தகுதியுமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி - பகுதி அளவிலான கூட்டமைப்பினா், மாற்றுத் திறனாளி நலிவுற்றோா் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
சுயஉதவிக் குழு தர மதிப்பீட்டில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், ஒரு வங்கிக் கடன் இணைப்பாவது பெற்றிருக்க வேண்டும். குழு தொடங்கி ஓராண்டாவது நிறைவடைந்திருக்க வேண்டும்.
குழு மீது புகாரில்லை என்பதற்கான சான்றை சம்பந்தப்பட்ட வட்டார மேலாளா், சமுதாய அமைப்பாளரிடம் பெற்றிருக்க வேண்டும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னா் சுழற்சி, விற்பனை, திறன் அடிப்படையில் தொடா்ந்து அனுமதி அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை இம்மாதம் 19ஆம் தேதிக்குள் ‘இணை இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், ஆட்சியா் அலுவலகம், 2ஆவது தளம், தூத்துக்குடி’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.