மதுக்கடைகளுக்கு ஜன.15, 26-இல் விடுமுறை!
அரியலூா் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்துக்கும் திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுத் தினம்(ஜன.26) ஆகிய நாள்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.