செய்திகள் :

மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! - மத்திய அரசு

post image

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள், விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது. முன்னதாக தமிழக அரசும் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருந்தது.

அண்ணாமலை

மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், "தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்" என்றார்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

Private Bus: 'சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்?' - மக்கள் விரோத முடிவை எடுக்கிறதா அரசு?

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்... மேலும் பார்க்க

Two-gender policy: `இது ஒன்றும் நோயல்ல மிஸ்டர் ட்ரம்ப்..!’ - பாலினம் குறித்து ஏன் இப்படி ஒரு முடிவு?

ிறம் Gender Identity "பாலின அடையாளம்" என்ற சொல் முதன்முதலில் 1960-களில் தோன்றியது. ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தால் வகைப்படுத்தப்பட்ட நபர், தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னை யாராகக் கருதுகிறார் ... மேலும் பார்க்க

Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Stalin : 'இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்!' - ஸ்டாலின் சொல்வதென்ன?

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல... மேலும் பார்க்க