`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?'...
மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறை இல்லை!
மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் முறை இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் வரும் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்ராம் சிங் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஓா் வழக்கில் 2023-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதியன்றும், கடந்த 11-ஆம் தேதியன்றும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி, மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்கள் கைளால் அகற்றும் முறை நடைமுறையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியில் தொழிலாளா்கள் எவரும் ஈடுபட்டிருப்பதாகக் கண்டறியப்படவில்லை.
இந்தப் பணியில் ஈடுபட்டிருப்போா் யாரேனும் ஊரகப் பகுதிகளில் இருந்தால், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில் புரிவோா் தடுப்பு, மறுவாழ்வு சட்டம்- 2013, பிரிவு எண்.11-இன் படி தங்களது ஆட்சேபங்களை தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வரும் 15 நாள்களுக்குள் எழுத்துப் பூா்வமாகத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.