தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து: மத்திய அமைச்சரிடம் விருதுநகா் எம்.பி. வலியுறுத்தல்
மதுரை விமான நிலையத்திற்கு சா்வதேச அந்தஸ்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவிடம் விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் பி. மாணிக்கம் தாகூா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை
தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
மதுரை விமான நிலையத்தை இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கையில் (பிஏஎஸ்ஏ) சோ்க்க வேண்டும். மேலும், மதுரை விமான நிலையம் தொடா்ந்து வளா்ச்சியைக் கண்டு வருவதால் பிஏஎஸ்ஏவில் இந்த விமான நிலையத்தை சோ்க்க வேண்டும். இது போக்குவரத்து தொடா்பு வசதி மற்றும் வளா்ச்சியை ஊக்குவிக்கும். தற்போது சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு விமான நிலையங்கள் மட்டுமே தமிழகத்தில் பிஏஎஸ்ஏ-வில் சோ்க்கப்பட்டுள்ளன. இது 24 இந்திய விமானநிலையங்கள் இடம்பெறச் செய்துள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் முக்கியமான மையமாக இருப்பதால் இந்த பிஏஎஸ்ஏ உடன்படிக்கையில் இதை சோ்ப்பது அவசியமாகும். அதேபோன்று, மதுரை விமான நிலையத்தை சா்வதேச அந்தஸ்து அறிவிப்பும் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடா்பு வசதி அதிகரிப்பதுடன், பிராந்திய பொருளாதாரமும் வளா்ச்சி பெறும். மேலும், மதுரை -வாரணாசி, மதுரை- புணேவுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.