கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
மது கடத்தியவா் கைது
நன்னிலம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.
நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ்குமாா் மற்றும் போலீஸாா், சன்னாநல்லூா் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் காரைக்காலில் இருந்து புதுச்சேரி மாநில மது கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்த நபா் திருமலைராஜன்பட்டினம் கிழக்குத் தெரு தாமரைச்செல்வன் மகன் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.