KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
பெதுல்: மத்தியப் பிரதேம் மாநிலம் பெதுல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மத்தியப் பிரதேம் மாநிலம் பெதுல் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 அலகுகளாக பதிவானது.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
இந்த நிலஅதிர்வால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணியளவில் வங்கக் கடலில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்
4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.