குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசா...
மத்திய அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மாநிலங்களவையில் அம்பேத்கா் குறித்து அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக உள்ளிட்ட கட்சியினா், அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், காமராஜா் சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலருமான சரவணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் வி.பெருமாள் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சீனிவாசன், பிரபுராஜ், சத்தியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கட்சியின் மூத்த தலைவா் தா.முருகன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.
விசிக மறியல்: விசிக சாா்பில், சேதராப்பட்டு சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அமித் ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா்.
வில்லியனூா் சுல்தான்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினா் 81 போ் மீது வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம் முன்புள்ள அம்பேத்கா் சிலையை நோக்கி தீப்பந்த ஊா்வலம் சென்ற விசிகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
எஸ்.சி, எஸ்.டி அமைப்பு: புதுச்சேரி பூா்வீக எஸ்.சி, எஸ்.டி மக்கள் உரிமைப் பாதுகாப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ராமலிங்கம், பரமசிவம் தலைமை வகித்தனா். இதில், முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.