செய்திகள் :

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

post image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் செல்கிறார்.

இந்நிலையில், வரும் ஆக.21 ஆம் தேதி வரையிலான இந்த மூன்று நாள் பயணத்தில், ரஷியா மற்றும் இந்தியா இடையிலான கூட்டுறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் ஆக.20 ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறும், இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின் 26-வது அமர்வில் அவர் கலந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

சமீபத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், ரஷியாவுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின், துணைப் பிரதமர் மண்டுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக, ரஷியாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகத்தினால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

It has been reported that External Affairs Minister S Jaishankar will be leaving for Russia today (August 19) on a 3-day official visit.

ராகுல் எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார்; பின்வாங்கவும் மாட்டார்: பிரியங்கா காந்தி

எந்த தாக்குதலுக்கும் ராகுல் காந்தி பயப்படமாட்டார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர். முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட்... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமா... மேலும் பார்க்க