நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்
மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் நகரச் செயலா் எ. இன்பராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி. பெரியசாமி, மின்னரங்கச் செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அகஸ்டின், எ. கலையரசி, ரெங்கநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மத்திய பட்ஜெட்டில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லதது,100 நாள் வேலைத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்தது, விவசாயிகள் உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்காதது, விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்யாதது, பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரயில் திட்டத்துக்கான அறிவிப்பு இல்லாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதேபோல, வேப்பூா் பேருந்து நிலையத்தில் குன்னம் வட்டச் செயலா் வி.செல்லமுத்து தலைமையில் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ.கே. ராஜேந்திரன், ஆலத்தூரில் ஒன்றியச் செயலா் எஸ். பாஸ்கரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என. செல்லத்துரை, மாவட்ட குழு உறுப்பினா் மகேஸ்வரி, வேப்பந்தட்டையில் ஒன்றியச் செயலா் கே.எம். சக்திவேல் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆா்ப்பாட்டம் செய்து, கண்டன உரையாற்றினா்.