மத்திய பட்ஜெட் நகல் கிழிப்புப் போராட்டம்
புதுக்கோட்டையிலுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களின் சாா்பில் மத்திய அரசின் தொழிலாளா் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பட்ஜெட் நகல் கிழிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத, தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கைவிட வலியுறுத்தியும் இப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம் தலைமை வகித்தாா்.
சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், தொமுச பேரவைச் செயலா் எம். வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா, தொமுச மாவட்டப் பொருளாளா் எஸ். மணிமொழியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் சி. அன்புமணவாளன், துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டக்காரா்கள் பட்ஜெட் நகலைக் கிழிக்க முயன்றபோது, அங்கிருந்த போலீஸாா் அதைத் தடுத்துப் பிடுங்கினா்.