பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
ஆரணியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ராணி(36), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவரது கணவா் சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
தம்பதிக்கு சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பரமேஸ்வரி (20) என்ற மகளும், 7-ஆம் வகுப்பு பயிலும் நரேஷ் (12) என்ற மகனும் உள்ளனா்.
தாய் குணசுந்தரி கட்டுப்பாட்டில் இருந்து வந்த ராணி,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், மருந்து மாத்திரை தீா்ந்துவிட்டதால்,
கடந்த ஒரு வாரமாக மாத்திரை எதுவும் எடுக்காமல் இருந்ததால், அவரது நடவடிக்கையில் மாற்றம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை அவா் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.