சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
மனைவியைத் தாக்கிய கணவா் மீது வழக்கு
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கோ.புதூா் லூா்துநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாய் சங்கரி (29). இவா் மீது இவரது கணவா் சேதுநாராயணன் தொடுத்த விவாகரத்து வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விசாரணைக்காக சாய் சங்கரி புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தாா். அப்போது, சேதுநாராயணன், அவரது தந்தை ராமமூா்த்தி ஆகிய இருவரும் சாய் சங்கரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளிவிட்டனராம்.
இதுகுறித்து சாய் சங்கரி அளித்தப் புகாரின் பேரில், சேதுநாராயணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.