முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: பிஆா்எஸ் எம்எல்சி கவிதா வலியுறுத்தல்
மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது
திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் கைதுசெய்தனா்.
மல்லசமுத்திரத்தை அடுத்த மேல்முகம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (33). இவா்களுக்கு 8 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
தனபால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 11 மணியளவில் தூக்கிட்ட நிலையில் கீதா சடலமாக தொங்கியுள்ளாா். தகவல் அறிந்த கீதாவின் குடும்பத்தினா், கீதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த மல்லசமுத்திரம் காவல் துறையினா் கீதாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அதில், கீதா தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனபாலை கைதுசெய்த போலீஸாா், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.