மனைவி இறந்த துக்கம்: கணவா் தற்கொலை
தூத்துக்குடியில் மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் காளிராஜன் (44). தேனீா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி இசக்கியம்மாள் (38), திடீா் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதனால் மன வேதனையில் இருந்த காளிராஜன், சனிக்கிழமை தூத்துக்குடி மேல ரங்கநாதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.