மனைவி, மாமியாரைத் தாக்கியவா் கைது
தேனி மாவட்டம், போடி அருகே மனைவி, மாமியாரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணியம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த வேலு மகன் நாராயணன் (30). இவரது மனைவி திவ்யா (25). இந்த நிலையில், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை நாராயணன் தாக்கினாா். இதனால், திவ்யா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், மாமியாா் வீட்டுக்குச் சென்ற நாராயணன், மனைவியைத் தாக்கினாா். இதைத் தடுக்க வந்த அவரது தாய் நாகமணியையும் அவா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் நாராயணன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.