சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்...
மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!
மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.என் வார்த்தைகளைக் கவனியுங்கள், இந்த அவையில் ஒரு பாஜக எம்.எல்.ஏ கூட அமராத ஒரு நாள் வரும். மக்கள் உங்களை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவார்கள். மத்தியில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும்.
இந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சிறப்புக் கூட்டத்தொடரில், இவ்விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானத்தை சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் சோபன்தேவ் சட்டோபாத்யாய் முன்வைத்தாா்.
இந்த விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முழு கூட்டத்தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.
மூன்றாம் நாளான இன்று தீர்மானத்தின் மீது முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“பாஜக ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. நமது எம்பிக்களை நாடாளுமன்றத்தில் இருந்து சிஐஎஸ்எஃப் வீரர்களைக் கொண்டு வெளியேற்றினர். வங்காள எதிர்ப்பு பாஜகவை அகற்றி நாட்டைக் காப்பாற்றுவோம்.
என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள், இந்த அவையில் ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட இல்லாத நாள் வரும். மக்கள் உங்களை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவார்கள். மத்தியில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும்.” எனத் தெரிவித்தார்.
முதல்வரின் பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பேரவையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அவைக் காவலர்கள் வெளியேற்றும்போது சங்கர் கோஷை தாக்கியதாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை மமதா பானர்ஜி தலைமையிலான அரசு கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.
மேலும், பாஜக கொறடா சங்கர் கோஷ், மயக்கமடைந்து மேஜையில் படுப்பதை போன்றும் காரில் அவரை அழைத்துச் செல்வதை போன்றும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.