செய்திகள் :

மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

post image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் மம்தா மற்றும் அவரது குழுவினரும் இன்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு முதலில் துபை செல்லவிருந்தனர். மீண்டும் அதே துபையிலிருந்து இரவு 8 மணிக்கு லண்டன் செல்லவிருந்தனர்.

வெள்ளியன்று பிற்பகல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல்வரின் பயணம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற மாநில செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அங்கு நிலைமை சீரடைந்ததையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று மாலை இங்கிலாந்து செல்லவிருக்கின்றார்.

மார்ச் 24 அன்று லண்டன் செல்லும் மம்தா இந்தியத் தூதரகம் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு மார்ச் 25 அன்று தொழிலதிபர்கள், வணிகர்களைச் சந்திக்க உள்ளார். மார்ச் 26ல் வணிகம் கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 27ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் உரையாற்றுகிறார். இறுதியாக, மார்ச் 28ல் அவர் லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்படுகிறார்.

முன்னதாக, 2015இல் மம்தா பானர்ஜி இங்கிலாந்து சென்றார். அப்போதைய மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா உள்பட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அவருடன் இருந்தனர்.

தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர். தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம்... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

6 நாள்களுக்குப் பிறகு, நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டது. நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், ... மேலும் பார்க்க

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் ந... மேலும் பார்க்க

உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார். தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்... மேலும் பார்க்க

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மே... மேலும் பார்க்க