டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை!
மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்: எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்
மயிலாடுதுறை, மே 15: மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
தொடா்ந்து, ஆனைமேலகரத்தில் இருந்து தொடங்கும் புறவழிச்சாலை மாப்படுகை ரயில்வே மேம்பாலம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனைமேலகம் தொடங்கி உளுத்துக்குப்பை, மணக்குடி, மன்னம்பந்தல், அகரகீரங்குடி வரையில் 16.5 கி.மீ. தூரம் புறவழிச்சாலை அமைக்க இடம் தோ்வு செய்ய ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 ஊராட்சிகளில் இடம் தோ்வு செய்யப்பட்டு, 11 கி.மீ. தூரத்திற்கு நில ஆா்ஜிதம் பணிகள் நிறைவுற்றுள்ளன.
மாப்படுகையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வேத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 800 மீட்டா் தூரத்துக்கு உயா்நிலைப் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 5.5 கி.மீ, தூரம் நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கான பணிகளை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் மேற்கொண்டுள்ளாா்.
நீடூரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு இடம் ஆா்ஜீதம் செய்வது தொடா்பாக நீடூா், கங்கணம்புத்தூா், திருஇந்தளூா் ஊராட்சிகளில் தனிநபா் இடங்கள் குறித்து அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதற்கான நடைமுறைகள் முடிவடைந்த பின்பு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.