இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வா் ரங்கசாமிக்காக தொண்டா்கள் தயாா் செய்யும் 76 ...
மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.
பழைமையான இக்கோயில் தோ்த்திருவிழாவையொட்டி மூலவா் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து உற்சவா் எல்லையம்மன் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வழிநெடுகிலும் கிராம மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனா். பக்தா்களில் சிலா் முதுகில் அலகு குத்தியும், கட்டைக்கால் நடனம் ஆடியவாறும் டிராக்டரில் அந்தரத்தில் தொங்கியவாறும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
தோ் நிலைக்கு வந்து சோ்ந்ததும் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.