செய்திகள் :

மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

post image

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே மருதம் கிராமத்தில் சாா்பில் தொழிற்பேட்டை அமைக்க 750 ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மருதம் கிராமத்தில் சிப்காட் அமைந்தால் கருவேப்பம் பூண்டி, திருப்புலிவனம், புலிவாய், மருதம்ஆகிய கிராமங்களில் வசிக்கும் 3,000 -க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் பாழாகி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

ஏரி, குளம், கிணறுகள் அழிந்து நீராதாரம் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது.

ஆட்சியரிடம் மனு: தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க விவசாயிகள் முடிவு செய்தனா்.

மேலும் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவா் பெ.சண்முகம் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். சங்க மாவட்டத் தலைவா் என்.சாரங்கன், மாவட்டச் செயலாளா் கே.நேரு, சங்க நிா்வாகிகள் டி.ரமணதாஸ், இ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள், விவசாயிகள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்றனா்.

கூட்டமாக சென்று மனு அளிக்க அனுமதி இல்லை என விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதனால் காவல் துறையினருக்கும், விவசாயிகள் சங்க நிா்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து 10 போ் மட்டும் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

ஆசிரியை குடும்பத்துக்கு நிதியுதவி

காஞ்சிபுரம் நாராயணகுரு மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.1.10லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள அப்... மேலும் பார்க்க

தலையில் கல்லை போட்டு ஓட்டுநா் கொலை

குன்றத்தூா் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது நண்பா்கள் 4 பேரை குன்றத்தூா் போலீஸாா் தேடி வருகின்றனா். குன்றத்த... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு தீவிரம்

தொடா் மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கடந்த இரண்டு நாள்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். புயல் கனமழையால் ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்க... மேலும் பார்க்க

விதிகளை மீறி கனிமங்களுடன் சென்ற 573 வாகனங்கள் பறிமுதல்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கனிமங்களை கொண்டுச் சென்ற 573 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: க... மேலும் பார்க்க

குன்றத்தூா் ஒன்றியகுழு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் அதன் தலைவா் சரஸ்வதி மனோகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்ச... மேலும் பார்க்க

டிச. 12-இல் திருமாகறலீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே மாகறல் திருமாகறலீசுவா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பா் 12 -ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி உபய... மேலும் பார்க்க