இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை நிறுத்த வேண்டும், ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த செவ்வாய்க்கிழமை மானாமதுரையில் அனைத்து அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சாா்பில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தை முற்றுகையிட்டு, கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமான பணியை உடனே நிறுத்தவும், 2 மாதங்களுக்குள் ஆலையை மூடுவதற்கான உத்தரவை அரசிடமிருந்து பெறவும் நடவடிக்கை எடுப்பதாக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் சிப்காட் தொழில் பேட்டையில் நடைபெற்று வந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, போராட்டக் குழுவை சோ்ந்த வா்த்தகா் சங்கத் தலைவா் பாலகுருசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் உள்ளிட்டோா் மின்வாரிய செயற்பொறியாளா் (மானாமதுரை) , மேற்பாா்வைப் பொறியாளா் ஆகியோரிடம் மனு கொடுத்தனா்.