செய்திகள் :

மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

post image

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவானது. அதனால் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வரும் லதா என்பவரிடம் தம்பியின் மருத்துவ செலவுக்காக ராஜலட்சுமி 13 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கினார். அதற்கு மாதந்தோறும் 78,000 ரூபாயை ராஜலட்சுமி வட்டியாக கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாக வட்டி பணத்தை ராஜலட்சுமி சரிவர கொடுக்கவில்லை என தெகிரிறது. அதனால் லதாவும் அவரின் மகள் ஸ்ரீவித்யாவும் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து வட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறி கட்டாயப்படுத்தி ராஜலட்சுமியிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

கைது

அதைத் தொடர்ந்து கடந்த 12.3.2025-ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்ற லதா, அவரின் மகள் ஸ்ரீவித்யா, தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் ராஜலட்சுமி குடும்பத்தினரை கைகளால் தாக்கியிருக்கிறார்கள். மேலும் அசல், வட்டி பணத்துக்காக ராஜலட்சுமியின் சொந்த வீட்டை எழுதித் தரும்படி இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ராஜலட்சுமி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அதிக வட்டி கேட்டு மிரட்டல், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லதாவிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு லதாவை (58) போலீஸார் கைது செய்தனர். கைதான லதா மீது கொலை உட்பட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் லதாவின் மகள் ஸ்ரீவித்யாவை போலீஸார் தேடிவருகிறார்கள்.

வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணம... மேலும் பார்க்க

பழநி: உள்கட்சி மோதல், முகநூல் பதிவு.. பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்தவர் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் பாஜக நிர்வாகியான ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைத்துரை மனைவி குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெள... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொன்ற ஓட்டுநர்கள் - கோவை அதிர்ச்சி

தூத்துக்குட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனியார் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றி ... மேலும் பார்க்க

நித்தியானந்தா சீடர்களை ஆசிரமத்திலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்! நடந்தது என்ன?

ராஜபாளையம் அருகே காட்டுப்பகுதியில் நீதிமன்ற உத்தரவினை மீறி இரு வேறு இடங்களில் ஆசிரமங்கள் கட்டி வாழ்ந்து வந்த நித்தியானந்தா சீடர்களை வருவாய் துறையினரும், போலீசாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த ச... மேலும் பார்க்க

கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம... மேலும் பார்க்க

`முட்டி போடு டா' - கோவை சீனியர் மாணவரை சுற்றி சுற்றி தாக்கிய ஜூனியர் மாணவர்கள்

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏ... மேலும் பார்க்க