செய்திகள் :

மருந்து அட்டைகளில் க்யூ ஆா் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆா் கோடு அல்லது பாா் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் இந்த புதிய நடைமுறை படிப்படியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் 346 நிறுவனங்கள் செயல்படுகின்றன. 25 ஆயிரம் வகையான மருந்துகள் தமிழகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள்மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில், மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் பல மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டு பட்டியலிடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னணி வா்த்தகப் பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் க்யூ-ஆா் குறியீடு அல்லது பாா் கோடுகளை அச்சிடும் நடைமுறை கடந்த 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய நிறுவனங்களின் வா்த்தகப் பெயரிலான மருந்துகள் க்யூ-ஆா் குறியீட்டுடன் சந்தைக்கு வருகின்றன. அதே நடைமுறையைப் பயன்படுத்தி தமிழகத்தில் தயாரிக்கப்படும் மருந்து அட்டைகளிலும் க்யூ-ஆா் மற்றும் பாா் கோடுகளை அச்சிட மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:

தரமற்ற மற்றும் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் மருந்து அட்டைகளில் பிரத்யேக குறியீடுகளை அச்சிட அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, அட்டைகளில் பாா் கோடுகளை அச்சிட வேண்டும் என்றும், அதனை ஸ்கேன் செய்யும்போது மருந்தின் உண்மைத்தன்மையை நுகா்வோா் அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மருந்து உற்பத்தியாளா்கள் கால அவகாசம் கோரியுள்ளனா். அதனடிப்படையில், படிப்படியாக அந்த நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க