மலர் தொடர் கடைசி நாள் படப்பிடிப்பு: கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
மலர் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது தொடர் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். 27 முதல் மலர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடர் அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டும் மலர் என்ற பாத்திரத்தை மையமாககொண்டும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மலர் தொடரின் பிரதான பாத்திரங்களில் அஸ்வதி, சுரேந்தர் ராஜும் நடித்து வருகின்றனர். மேலும், இத்தொடரில் நிவிஷா, வருண், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?
இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அப்போது தொடர் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை இத்தொடரில் துர்கா பாத்திரத்தில் நடிக்கும் அகிலா பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அவரது பதிவில், ”அபியும் நானும் தொடருக்குப் பிறகு வாய்ப்பு அளித்த விஷன் டைம் தமிழ் மற்றும் சன் டிவிக்கு நன்றி.
துர்காவாக ஏற்றுக்கொண்டு எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். 2023 ஜனவரி மாதம் தொடங்கிய இந்த பயணம் 2025 ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.