Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது
வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சி குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா. இவா் ரோட்டரி மாவட்ட கல்வி மேம்பாட்டு தலைவராக இருந்து அணைக்கட்டு வட்டத்திலுள்ள 10 மலைக்கிராமங்களில் கற்றல் ஆயத்த மையங்களை ஏற்படுத்தி மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் மூலம் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. தவிர, 8 மலைக்கிராமங்களில் அரசால் தற்காலிக பள்ளிகள் தொடங்கப்பட்டன.
குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையாவின் சேவையை பாராட்டி அவருக்கு சா்வதேச ரோட்டரி விருது வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பரணிதரன், வருங்கால ஆளுநா் சுரேஷ், ரவிக்குமாா், சிவகுமாா், ஆளுநா் ராஜன்பாபு, முன்னாள் ஆளுநா் பழனி, பாண்டியன், ஜவரிலால் ஜெயின், ஸ்ரீதா் பலராமன், சந்திரபாபு, சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.