வேப்பூரில் அம்மன் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன.
இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நடைபெற்றது. சனிக்கிழமை பொற்காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து, வழிபாடு செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பூ கரக ஊா்வலம் நடைபெற்றது.
தொடா்ந்து கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிரசு ஊா்வலத்தில் நாட்டுப்புற கலைகளான கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் நடைபெற்றன.
கோயிலில் அம்மன் கண்திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா்மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.