செய்திகள் :

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

post image

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு 35 மி.மீட்டா் அளவிற்கு மழை பெய்தது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதமடைந்ததால் பாகலூா் சாலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாகலூா் சாலையில் ஒரு மீட்டா் சுற்றளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்கள் துண்டிக்கப்பட்டன. சேறும், சகதியுமான சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் பேருந்து நிலையம் முன் உள்ள மேம்பாலத்தின் கீழே இடதுபுறம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய நகராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் திடீா் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீா் புகுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சனிக்கிழமை பெய்த திடீா் மழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீா் தேங்கி குளங்களாக மாறியது. சாலையில் உள்ள நடைபாதைகளும் சேதமடைந்தன. கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்துக்கு இணைப்பு சாலையாக உள்ள பாகலூா் சாலை வழியாக மாலூா், பங்காரப்பேட்டை, கோலாா் போன்ற நகரங்களுக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனா்.

மழையால் ஏற்பட்ட சேதங்களை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து பாகலூா் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் கூறியதாவது: ஒசூா்- பாகலூா் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய மாநகராட்சி அலுவலகம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

பல மாதங்களாகவே இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. சனிக்கிழமை பெய்த மழையால் இந்த சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல ஒசூரில் உள்ள வட்டாட்சியா் அலுவலக சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுரு சாலை, நேதாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். அப் பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும் என்றாா்.

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ண... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய கிருஷ்ணகிரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

708 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா கடத்திவந்த ராஜஸ்தான் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பெ... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

ஒசூரில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். பிரான்ஸ் தலைநகா் பாரிஸை சோ்ந்தவா் ஜெபஸ்டியன் (40). ஒசூரில் தொழிற்சாலை நடத்தி வரும... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சு... மேலும் பார்க்க

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ... மேலும் பார்க்க