செய்திகள் :

மாங்கல்ய பாக்கியம்: திருவைராணிக்குளம் கோயிலில் குவியும் பெண்கள்!

post image

ஆலுவா திருவைராணிக்குளம் மகாதேவன் கோயிலில் திறப்பு விழா கொண்டாடுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட காலம் மாங்கல்ய பாக்கியம் அடையாத பெண்களும் தீர்க சுமங்கலி பாக்கியத்தை வேண்டி இந்த கோயிலுக்கு வருகின்றனர். பட்டும், தாலியும் கடவுளுக்குச் செலுத்துவதே முக்கியமான வழிபாடு. நூலில் கோர்த்த தங்கத்தாலியைச் சிவந்த புடவையில் வைத்து செலுத்துகின்றனர். திருமணத்திற்கு முன்பு பட்டும், புடவையும் திருமணத்திற்குப் பின்பு பட்டும், தாலியும், இனத்தாலியும் ஸ்ரீ பார்வதி தேவியின் சன்னிதானத்தில் சமர்ப்பிக்கின்றனர். தீர்க மாங்கல்யத்திற்காகவும் குடும்ப செழிப்பிற்காகவும் தாலி மாற்றல் சடங்கும் இங்கு நடைபெறுகிறது. நூற்றாண்டுகளின் பழமையான தங்கத்தாலி மாற்றுதலே இங்கு நடைமுறையில் உள்ள வழக்கம்.

இது மட்டுமல்லாமல் கண்ணாடி, தொட்டில், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் விளக்கு, போன்ற வழிபாடுகளும் புஷ்பாஞ்சலிகளும் கோயில் திறப்பு விழாக் காலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. முழுவதுமாக நகைகளில் அலங்கரிக்கப்பட்ட பார்வதி தேவி புடவையும் கட்டி மல்லிகைப்பூவும் சூடி திருமணப் பெண்ணின் தோற்றத்தில் காணப்படுவாள். தரிசனத்திற்குப் பிறகு வெளியில் இறங்கி மகாதேவனுடைய நடையில் எள்ளுப் பறையும் ஸ்ரீ பார்வதி தேவியின் நடையில் மஞ்சள் பறையும் நிறைப்பார்கள்.

அரிசி, பூ, நெல், மலர் பறைகளும் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேவி பிரசாதமான அரவணை பாயசம், அப்பம், அவள், நெய்வேதியம் என்பன கவுண்டரில் கிடைக்கும். ஆறு பிரசாதங்கள் அடங்கிய பிரசாத பெட்டகமும் கிடைக்கின்றது. கோயிலில் உப பிரதிஷ்டையான நாகராஜாவின் தளத்தில் ஆயில்ய தினமான வியாழன், ஆயில்ய பூஜை நடைபெறும். நாகங்களுக்குப் பாலும் இளநீரும் மஞ்சள் பொடியும் கொடுத்து அபிஷேக பூஜை நடத்தப்படும். கோயில் திறக்கையில் வரும் ஆயில்ய ராசிக்காரர்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும்.

பக்தர்களுக்கு தேதியும் நேரமும் தேர்ந்தெடுத்து வழிபாடு நடத்துவதற்காக “வெர்சுவல் க்யூ” என்ற சேவை கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பக்தர்களும் அதையே பயன்படுத்துகின்றனர். முன்பதிவு செய்யப்பட்டு வருகின்ற பக்தர்களின் தகவல்கள் வேறுபட்ட கவுண்டர்களில் சரி பார்க்கப்படுகின்றது. அதன்பிறகு அங்குள்ள தொண்டர்கள் தரிசனத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். ஜனவரி 23-ஆம் தேதி கோயில் நடை திறப்பு விழா முடிவடைகிறது.

திடீரென இன்ஸ்டாவில் வைரலான ஒடியா பாடல்!

இன்ஸ்டாகிராமில் திடீரென ஒடியா மொழிப் பாடல் ஒன்று வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் வைரலாவது வழக்கம். அப்படி, தமிழகம் வரை புரியாத பாடல் ஒன்று சில நாள்களாக வைரலாகி அனைவரின் கவ... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை டிரைலர்!

இயக்குநர் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.இ... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் புகழ்ந்த எஸ். ஜே. சூர்யா!

நடிகர் எஸ். ஜே. சூர்யா நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்... மேலும் பார்க்க

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவமதிப்பு! மன்னிப்பு கோரிய வர்ணனையாளர்

24 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை அவமதிக்கும் விதத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: வெற்றியாளர் அறிவிப்புக்குப் பிறகு ஜாக்குலின் வெளியிட்ட விடியோ!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஜாக்குலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் (ஜன. 19) நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ம... மேலும் பார்க்க

பாட்டல் ராதா படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன்: மணிகண்டன்

நடிகர் மணிகண்டன் பாட்டல் ராதா திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்துள்ளார்.இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட... மேலும் பார்க்க