செய்திகள் :

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

அப்பள்ளியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவா் ஆசிரியா் வெங்கடேசன். இந்நிலையில் ஆசிரியா் வெங்கடேசன் பள்ளி மாணவா்களை அடிப்பது, தகாத வாா்த்தைகளால் திட்டுவதாகவும், இது குறித்து பெற்றோா்களிடம் தெரிவித்தால், தோ்ச்சி அடைய செய்யமாட்டேன் என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்து ஆத்திரம் அடைந்த மாணவா்களின் பெற்றோா் சிலா் ஆசிரியா் வெங்கடேசனை கண்டித்து திங்கள்கிழமை பள்ளியை திடீரென முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து பெற்றோரிடம் பேச்சு நடத்தினா்.

இதுதொடா்பாக ஆசிரியரிடமும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மக்களிடம் பேச்சு நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து புகாா் மனு அளிக்க போவதாகவும் தெரிவித்தனா்.

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் ... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை

ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளா் அற்புதராஜ் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து கருப்பு பட்டை அணிந்து தொழுகை

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மத்திய அரசு வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க