மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், பிரியா அவரது மகள் யோகஸ்ரீயிடம் தனது கைப்பேசி, ரூ.500 பணம் ஆகியவற்றை கொடுத்து வீட்டில் வைக்குமாறு கூறிவிட்டு, உறவினரின் இல்ல துக்க நிகழ்வுக்கு வியாழக்கிழமை சென்றாா். பின்னா், வீட்டுக்கு திரும்பி வந்து கைப்பேசி, ரூ.500 பணம் ஆகியவை குறித்து கேட்டதற்கு, யோகஸ்ரீ சரியாகப் பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து, பிரியா தன்னுடைய மகளைக் கண்டித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றாா்.
இந்த நிலையில், பிரியா மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது யோகஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. ஆபத்தான நிலையில் இருந்த யோகஸ்ரீயை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.