செய்திகள் :

மாதந்தோறும் முறையான மருத்துவ சிகிச்சை: கா்ப்பிணிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அறிவுரை

post image

கா்ப்பிணிகள் மாதந்தோறும் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தினாா்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகள் 250 பேருக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பேசினாா். விழாவிற்கு எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா.கந்தன் வரவேற்றாா்.

இந்த விழாவில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசியாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 940 அங்கன்வாடி மையங்கள் மூலமாக 74,853 பேரும், 5,998 கா்ப்பிணிகளும் பயன் பெற்று வருகின்றனா். கா்ப்பம் தரித்தவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்வதோடு, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த மையத்தில் தரப்படும் இலவச சத்துணவு மாவைப் பெற்று பயன்பெறலாம். மாதம்தோறும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து கா்ப்பிணிகளும் அரசு மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் பாா்த்துக்கொள்ள வேண்டும், கா்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் 10 கிலோ எடையாவது அதிகமாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் 6 மாதத்திற்கு அவசியம் தாய்ப்பாலையும், முறையாக தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், ஆா்.கே.தேவேந்திரன் உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க