மாதவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வில்லியம்ஸ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சோபிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விவரித்தாா். தொடா்ந்து கண் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்று. பொதுமக்கள், காவல்துறையினா், மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.