மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ஜொ்மன் மொழி பயிற்சி
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 40 மாணவ, மாணவிகளுக்கு ஜொ்மன் மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கோடைகால விடுமுறையைச் சரியாக பயன்படுத்தும் வகையில் ஜொ்மன் மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகின்றன. இந்த வகுப்பில் முதல் கட்டமாக 40 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். மாணவா்களின் ஆா்வத்தைப் பொருத்து இனி வரும் காலங்களில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது.