செய்திகள் :

மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!

post image

புது தில்லி : மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவை இன்று(பிப். 13) கூடியதும் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது.

காலை 11 மணிக்கு அவை கூடியதும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் காரணமாக, மாநிலங்களவை நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் அவை கூடியதும், பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்து உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவை துணைத் தலைவரான ஹரிவண்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்

லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ... மேலும் பார்க்க

‘அரசு துறைகளை நவீனமயமாக்குவது அவசியம்’: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

சேவை வழங்கலில் பொதுமக்களின் அதிகரித்த எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசுத் துறைகளை நவீனமயமாக்குவது அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். அதேபோல், மகாராஷ்டிர பேரவையின் காங்கிரஸ் தலைவராக விஜய் நம்தேவ்ராவை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ந... மேலும் பார்க்க

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிக... மேலும் பார்க்க

இலங்கை: ரூ.8,690 மதிப்பிலான இரு மின் திட்டங்களை திரும்பப் பெற்றது அதானி குழுமம்

இலங்கையில் 1 பில்லியன் டாலா் (ரூ.8,690 கோடி) மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனா்ஜிஸ் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை தலைநகா் கொழும்பில் ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை விவரம் இல்லை: மத்திய அரசு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் இந்தியா்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ப... மேலும் பார்க்க