ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
மாநில ஆடவா் கபடி சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்
மன்னாா்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மன்னாா்குடி அருகே வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழகம் சாா்பில், ஆக.8, 9-ஆம் தேதிகளில் வடுவூரில் மாநில ஆடவா் கபடி போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
இதில், சென்னை வருமான வரித்துறை, சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி, சென்னை லயோலா கல்லூரி அணி, சென்னை ஜேபிஆா் கல்லூரி அணி, சேலம் செவன் லயன்ஸ் அணி, தஞ்சை பெரியாா் மணியம்மை கல்லூரி மற்றும் தேனி, கோவை, தஞ்சை மாவட்ட அணிகள் என மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில், சேலம் செவன் லயன்ஸ் அணியும், சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக் கழக அணியும் சனிக்கிழமை மோதின. இதில், 37-33 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை பெற்றது.
சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி 2-ஆமிடத்தை பெற்று ரூ. 75,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பையும், சென்னை வருமான வரித்துறை மற்றும் வடுவூா் புதுகை நண்பா்கள் அணிகள் 3-ஆமிடத்தை பெற்று ரூ. 50,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பையை பெற்றன.
தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், மன்னாா்குடி தரணி குழுமங்களின் தலைவா் எஸ். காமராஜ் ஆகியோா் கபடி வீரா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா். பரிசளிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலாளா் ராச. ராசேந்திரன், துணைத் தலைவா் பொன். கோவிந்தராஜ், வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழக தலைவா் பிரபு உள்ளிட்டோா் பரிசு பெற்ற கபடி அணிகளுக்கு பரிசுத்தொதை, கோப்பைகள் வழங்கினா்.