`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
மாநில கால்பந்துப் போட்டி: புன்னைக்காயல் பள்ளி தகுதி
ஆறுமுகனேரி: புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
தூத்துக்குடி தனியாா் கல்லூரி மைதானத்தில் மாவட்ட அளவிலான 14 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில், இறுதி ஆட்டத்தில் 2-க்கு 0 என்ற கோல்கணக்கில் கீழமுடிமண் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணியை புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. இதன்மூலம், மாநில அளவிலான போட்டிக்கு இப்பள்ளி தகுதி பெற்றுள்ளது.
அணியின் மாணவா்கள், பயிற்சியாளா் ரைமன் ஆகியோரை பள்ளித் தாளாளா் சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளாா், தலைமையாசிரியா் செபஸ்டின்ராஜா, உடற்கல்வி ஆசிரியா் சகாயராஜ், ஊா் நிா்வாகக் கமிட்டியினா், பொதுமக்கள் பாராட்டினா்.