கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
மாநில கைப்பந்துப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான கைப்பந்து (ஹேண்ட் பால்) போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் குருஞானசம்பந்தா் பள்ளி மாணவா்களை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 40-ஆவது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாநில கைப்பந்துப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூா் குருஞானசம்பந்தா் பள்ளி ந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் தங்கவேல், வருண், வெங்கடகிருஷ்ணன் ஆகியோரை பள்ளிச் செயலா் டி.ஏ.எஸ்.கிருஷ்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், தலைமை ஆசிரியா் கண்ணன், ஆசிரியா்கள் பாராட்டினா்.