ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
மாநில பெண்கள் கபடி போட்டி செங்கல்பட்டு அணி முதலிடம்
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாலசமுத்திரப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சிக்குள்பட்ட பாலசமுத்திரப்பட்டியில் செவன் ஸ்டாா் கபடிக் குழு மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் கபடிசெவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில், கோவை, சென்னை, கரூா், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கள்ளக்குறிச்சி, அரியலூா், செங்கல்பட்டு உள்பட 32 மாவட்டங்களிலிருந்து 58 அணிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எல்.எஸ். கபடி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், திருச்சி மாவட்டம் மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணியினரும் மோதினா்.
இப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எல்.எஸ். கபடி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினா் 30-21 என்ற புள்ளிக்கணக்கில் மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணியை வீழ்த்தி முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றனா்.
இரண்டாமிடம் பிடித்த மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த திருவாரூா் மாவட்டம் ஆதங்குடி ஏ.வி. ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ஆம் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் கபடி அணியினருக்கு பரிசாக ரூ.5,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.